சென்னை:சென்னையில் இருந்து இன்று( நவ 8) காலை 10 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் 164 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 172 பேருடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஓடுபாதையில் செல்லத் தொடங்கிய போது, திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கண்டுபிடித்தார்.
பின்னர் விமானம் வானில் பறப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை ஓடுபாதையில் நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தை இழுவை வண்டிகள் மூலமாக விமானம் நிற்க வேண்டிய இடத்திற்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதோடு விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த இயந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக முயற்சி செய்தும் விமானத்தை சரிபார்க்க முடியவில்லை. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் விமான ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க :பருவ மழைக்காலத்தில் தடையில்லா மின்சாரம்; அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்..!