தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை: குடும்பப் பிரச்சனையில் குற்றப் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் தற்கொலை! - chennai police suicide

Chennai Police suicide: பட்டினப்பாக்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்ப பிரச்சனை காரணமாக சிறப்பு குற்றப் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police Image
காவலர் ஜான் ஆல்பர்ட் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 10:00 AM IST

சென்னை: தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஜான் ஆல்பர்ட். இவர் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் ஜான் ஆல்பர்ட் அவரது மனைவிகும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று தனது வீட்டில் ஜான் ஆல்பர்ட் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஜான் ஜெஸ்ஸி, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் ஜான் ஆல்பர்ட் உடல் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட ஜான் ஆல்பர்ட்ற்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தடுப்பு உதவி எண் (Credits - ETV Bharat Tamil Nadu)

தற்கொலைத் தடுப்பு உதவி எண்: எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல, நீங்கள் மன உளைச்சலில் இருந்தாலோ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினாலோ 104 அல்லது சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் 044-24640050 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுங்கள்

இதையும் படிங்க: கூடுதலாக வழங்கப்பட்ட ஊதிய உயர்வை திரும்ப பெறும் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - RECOVERY OF EXCESS SALARY INCREMENT

ABOUT THE AUTHOR

...view details