சென்னை:தேனாம்பேட்டை ரத்னா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரும், அவரது மனைவி பானுமதி என்பவரும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அடையாறில் உள்ள எஸ் பேங்க் என்ற தனியார் வங்கியில் மூத்த குடிமக்களுக்கான வங்கிக் கணக்கை பராமரித்து வந்துள்ளனர்.
ஆசை வார்த்தை:இதனைத் தொடந்து, அந்த வங்கியின் மேலாளர் பேட்ரிக் ஹோப்மேன், ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவியிடம், அவர்கள் அதே வங்கியில் வைப்புத் தொகையில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ராஜேந்திரன்-பானுமதி தம்பதியி, தங்களிடமிருந்த 7.5 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் கடந்த 2021ஆம் ஆண்டு டெபாசிட் செய்துள்ளனர். அதன்பிறகு ராஜேந்திரன்-பானுமதி தம்பதி வெளிநாட்டிற்குச் சென்றுள்ளனர்.
மோசம் செய்த மேலாளர்: இதை அறிந்த வங்கி மேலாளர் பேட்ரிக், ராஜேந்திரனின் செக்கில் போலியாக கையெழுத்து போட்டு, வைப்புத் தொகையில் இருந்த 7.5 கோடி ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். பின், அந்த பணத்தை அவரின் (மேலாளரின்) நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வங்கிக் கணக்கிற்கு டெபாசிட் செய்துள்ளார்.