தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக கொலை.. 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! - Egmore Murder Judgement - EGMORE MURDER JUDGEMENT

Egmore Murder: எழும்பூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 7:19 PM IST

சென்னை: சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவர், கடந்த 2015ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சில நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சந்திரசேகர், ஜான்சன் மற்றும் கவிதா உள்பட 13 நபர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்திரசேகர், ஜான்சன் மற்றும் கவிதா ஆகியோர் மீதான குற்றம் சத்தேகத்திற்கு இடமின்றி காவல்துறை நிரூபித்துள்ளதால், 3 நபர்களுக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:“யுபிஎஸ்சி தேர்வில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாமே?” - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை! - AI Technology In UPSC

ABOUT THE AUTHOR

...view details