செங்கல்பட்டு: தஞ்சாவூர் மாவட்டம் திருவுடைமருதூர் அருகே பந்தலூர் பகுதியை சேர்ந்த கணேஷ் (60) - ராஜகுமாரி (55) தம்பதியின் மகள் மகள் அப்சரா (28). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் தாய், தந்தையுடன் செங்கல்பட்டு அண்ணாநகர் ஐந்தாவது தெருவில் வாடகை வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தார்.
இந்நிலையில், அப்சாராவின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று (ஜூலை 30) அப்சாராவின் தாய் பல முறை மகள் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்சரா செல்போன் எடுக்காததால் பக்கத்து வீட்டுக்கு தொடர்பு கொண்டு தனது மகளிடம் செல்போனை கொடுக்கும் படி கேட்டுள்ளார்.
இதனையடுத்து, பக்கத்து வீட்டுக்காரர் அப்சராவின் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது வீட்டின் உட்புறம் கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. உடனே அவர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார் அப்சரா வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அப்சரா சடலமாக இருந்துள்ளார். உடனே அப்சரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதுநிலை பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள பணி சுமை காரணமா? குடும்ப பிரச்சனையா அல்லது காதல் விவகாரமா என செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்கொலை தீர்வல்ல:சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
இதையும் படிங்க:சட்டப்பேரவைக்குள் குட்கா விவகாரம்: திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லும் - ஐகோர்ட் அதிரடி