மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது சக்கரா நகர். இங்குள்ள தனியார் ஜெராக்ஸ் கடையில் லாவண்யா என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சித்திக் (25) என்பவர் பல நாட்களாக லாவண்யாவை தன்னை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஞாயிறு (நவ.17) அந்த ஜெராக்ஸ் கடைக்கு சென்று லாவண்யாவை காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு சித்திக்கிடம், லாவண்யா மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சித்திக், லாவண்யாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் நிலைகுலைந்த லாவண்யா மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளோர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.