தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதியக் காரணங்களுக்காக வேலூரில் கோயில் இடிப்பு? கே.வி.குப்பம் அருகே நடப்பது என்ன? - Vellore TEMPLE DEMOLITION ISSUE - VELLORE TEMPLE DEMOLITION ISSUE

Temple demolition issue: வேலூரில் கே.பி.குப்பம் பகுதியில் பொது இடத்தில் இருந்த காளியம்மன் கோயில் சாதிய காரணங்களுக்காக இடிக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இடிக்கப்பட்ட கோயில்
இடிக்கப்பட்ட கோயில் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 8:28 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம்,கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் பகுதியில் பொது இடத்தில் இருந்த காளியம்மன் கோயில் சாதிய காரணங்களுக்காக இடிக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் மீது 2 வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேவரிஷிகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் ராஜா அளித்த புகாரின் அடிப்படையில், பொதுச்சொத்துக்கு சேதம் பிரிவிலும், நவீன் குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்சி/ எஸ்டி பிரிவு, பொதுச்சொத்து சேதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லோகநாதன் மீது கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, கோயிலுக்கு பட்டியல் இனத்தவர் வரக்கூடாது எனக் கூறி மாற்றுச் சமுகத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு கோயிலை இடித்துள்ளார். இக்கோயில் பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு கூட்டத்தில், இந்த விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதன் பின்னர், கோயில் இடிக்க காரணமாக இருந்த நபர்கள் மீது கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், குடியாத்தம் வருவாய்த்துறை அதிகாரிகள் இரு சமூகத்தினரிடமும் பேச சமாதானக் குழு கூட்டம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி, சமாதானக் குழு கூட்டமும் நடைபெற்று முடிந்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:இந்த வருஷம் எந்த ட்ரெண்டிங்கில் விநாயகர்? சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்! - VINAYAGAR idols MAKING

ABOUT THE AUTHOR

...view details