திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்டார். அப்பொழுது, அவரை வரவேற்க பாஜகவினர் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்தனர்.
இந்நிலையில், அண்ணாமலை வந்து சென்று ஒரு வார காலம் ஆன நிலையில், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் அண்ணாமலையை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்கள் இன்னும் அகற்றப்படவில்லையென, வாணியம்பாடி கிராம நிர்வாக அலுவலர் திலீப் குமார் கொடுத்த புகாரின் பேரில், பாஜக நிர்வாகிகளான வேலு மற்றும் பிரதீப் ஆகியோர் மீது வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.