வேலூர்: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்.19) நடைபெறவுள்ளதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையானது இன்று (ஏப்.17) மாலை 6 மணியோடு ஓய்ந்த நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இறுதிக்கட்ட பரப்புரையாக 5 கிமீ தூரத்திற்கு இருச்சக்கர பேரணியாகச் சென்று பரப்புரையை முடித்துக் கொண்டார்.
இந்த நிலையில், அனுமதியின்றி தொரப்பாடியில் இருந்து அண்ணா கலையரங்கம் வரை வாகனப் பேரணி சென்றதாக, தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தேர்தல் பறக்கும் படையினர் புகார் அளித்துள்ளனர்.