தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்கள் காரோனா கால ஊக்கத் தொகை: சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் உரிய முடிவெடுக்க உத்தரவு! - Sweepers Incentive Amount Case - SWEEPERS INCENTIVE AMOUNT CASE

Corona period Sweepers Incentive Amount Case: கரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத் தொகை 15 ஆயிரம் ரூபாயை வழங்கக் கோரிய வழக்கில் தூய்மை பணியாளர்கள் மீண்டும் அரசுக்கு முறையாக விண்ணப்பிக்கவும், அதன் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Corona period Sweepers Incentive Amount Case
Corona period Sweepers Incentive Amount Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 6:26 PM IST

மதுரை:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பாக, அன்னமயில் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கரோனா நோய் தொற்று காலத்தில் தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் முன்கள பணியாளர்களாகப் பணி செய்து வந்தனர்.

2021ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி அன்று தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை ஒன்றில், 2021 கரோனா நோய்த் தொற்று உச்சநிலையிலிருந்த காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

ஆனால், இன்றுவரை அந்த அரசாணையின் அடிப்படையில், தூய்மைப் பணியாளர்கள் யாருக்கும் ஊக்கத்தொகை 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. இதனை வழங்கக் கோரி அதிகாரிகளுக்குப் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவில், "கரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை வழங்கக் கோரி மீண்டும் தனித்தனியே தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலரிடம் மனு வழங்கவும், அதனை சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:ஆருத்ரா மோசடி வழக்கு: திருவள்ளூர் கிளை இயக்குனர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details