கோயம்புத்தூர்:கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷர்மிளா, தனியார் பேருந்தை இயக்கியதை தொடர்ந்து கோவையின் முதல் பேருந்து ஓட்டுநர் என சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பிரபலங்கள், பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் திமுக எம்.பி கனிமொழியை அந்த பேருந்தில் பயணம் செய்ய வைத்ததாகக் கூறி தனியார் பேருந்து உரிமையாளர் தன்னை பணி நீக்கம் செய்ததாக ஷர்மிளா சர்ச்சையை கிளப்பினார். இந்த விவகாரத்தில் ஷர்மிளாவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், வேலை இழந்த பெண் ஓட்டுநரான அவருக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நடிகரான கமலஹாசன் 15 லட்சம் மதிப்பிலான மராசோ காரை பரிசாக வழங்கினார்.
இதனை தொடர்ந்து சர்மிளா அந்த காரை ஓட்டி வருகிறார். இந்த நிலையில் சர்மிளா கடந்த பிப்.2 ஆம் தேதி சத்தியமங்கலம் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த போது சங்கனூர் சந்திப்பில் பணியில் இருந்த C1 காவல் நிலைய போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி, காரில் வந்த ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.