ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட குடிமல்லூர் பகுதியில், தனியார் பங்களிப்பு மற்றும் 'நமக்கும் நாமே' திட்டத்தின் கீழ் 6.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 19 புதிய துணை சுகாதார நிலையங்களின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு கட்டடங்களைத் திறந்து வைத்தனர்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாயப்பட்டறைகள் அதிகம் நிறைந்த மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு என்பது அதிக அளவில் காணப்படுவதாகவும், இதனைக் கண்டறிய ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புற்று நோய் கண்டறியும் சோதனை அரசு சார்பில் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.