தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தளபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கேன்".. திடீரென கடுப்பான புஸ்ஸி ஆனந்த்!

புஸ்ஸி ஆனந்த் தவெக மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அவரது காரின் டிரைவர், காரை லேசாக நகர்த்தியதால் நான் பேசிட்டு இருக்கேன், நீ வண்டிய எடுக்குற எனக் கடிந்து கொண்டார்.

தவெக மாநாடு ஏற்பாடுகள், புஸ்ஸி என்.ஆனந்த்
தவெக மாநாடு ஏற்பாடுகள், புஸ்ஸி என்.ஆனந்த் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2024, 6:50 AM IST

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இதற்கான மேடை, பார்க்கிங் உள்ளிட்ட ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் 95% முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் பார்வையிட்டார்.

மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பின்னர் காரில் ஏறிச் சென்றார். அப்போது மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது காரின் டிரைவர் காரை திடீரென முன்னோக்கி நகர்த்தினார். அப்போது புஸ்ஸி ஆனந்த், "நான் பேசிட்டு இருக்கேன்.. நீ வண்டிய எடுக்குற.. என டிரைவரிடம் கடிந்து கொண்டார்.

இதையும் படிங்க :"தவெக மாநாட்டு திடலில் உயர்ந்து நிற்கும் காமராஜர், பெரியார், அம்பேத்கர்" -தமிழக அரசியல் களத்தில் விஜய் முன் வைக்கப்போகும் மாற்றம் என்ன?

மேலும், விஜய்க்கு அடுத்த இடத்தில் நான் இருப்பதால் இப்படி காரில் உட்கார்ந்து பேசும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை எனவும், நிகழ்ச்சியை தினமும் பார்க்கிறீர்கள், இப்படி தினமும் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகளை கேட்டு வந்தால் நாங்கள் எப்படி வேலைகளை செய்து முடிப்பது, இது பற்றி முழுமையாக 26ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறினார்.

பின்னர் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் ஆகியவை தவெக தலைவர் விஜயின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. அதே போன்று வருபவர்களுக்கு உணவும், காவல்துறையின் அறிவுறுத்தலின்படி பேரிகார்டு அமைத்தல் பணிகளும் நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details