தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டில் அரசியல் கூடாது: அலங்காநல்லூரில் 2ஆம் பரிசு அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரர் அ.பி.சித்தர் பேட்டி! - Tamil Latest news

Alanganallur Bullfighter issue: ஜல்லிக்கட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும் அரசியல் ஆக்கக் கூடாது. மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2வது இடத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாடு பிடி வீரர் அ.பி.சித்தர் பேட்டி.

bullfighter-abi-sidhar-petition-to-district-collector-over-disturbance-in-alankanallur-jallikattu-prize-giving
ஜல்லிக்கட்டில் அரசியல் கூடாது: அலங்காநல்லூரில் இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரர் அ.பி.சித்தர் பேட்டி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 11:47 PM IST

ஜல்லிக்கட்டில் அரசியல் கூடாது: அலங்காநல்லூரில் இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரர் அ.பி.சித்தர் பேட்டி!

மதுரை: உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன. 17ஆம் தேதி நடைபெற்ற முடிந்தது. இதில் 18 காளைகளைப் பிடித்த கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார், 17 காளைகளைப் பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் இரண்டாம் இடம் பிடித்ததாக ஜல்லிக்கட்டு விழா கமிட்டி அறிவித்தது. இதனை ஏற்க மறுத்த அபி சித்தர் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும், மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி முடிவுகளை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புகார் மனு அளித்த அபி சித்தர் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டதாகவும். முதல் பரிசு பெற்ற கருப்பாயூரணி கார்த்திக்கு மூன்று சுற்றுகள் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் கமிட்டியிடம் நான் முறையிட்டும் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் இதுகுறித்து தற்போது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறேன் என்றார். மேலும் அவர், வீடியோ பதிவுகளைப் பார்த்து இறுதிச்சுற்றில் மாடுகள் பிடிக்கப்பட்டதை எண்ணினால் யார் வெற்றி பெற்றார் என தெரிய வரும்,விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளேன் என்றார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்கள் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும் அரசியல் ஆக்கக் கூடாது என்றும், வரும் 24ஆம் தேதி கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தைத் திறக்க வருகை தரும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளேன்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details