தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் டூ லண்டன் விமானம் திடீர் ரத்து.. காரணம் என்ன? - Chennai To London Flight Cancelled

Chennai To London British Airways Flight Cancelled: சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் யணிகள் கடும் அவதிக்குள்ளானர்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 8:18 PM IST

சென்னை: லண்டனில் இருந்து சென்னை வரவேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் சென்னைக்கு வராமல், லண்டனுக்கே திரும்பி சென்றுவிட்டதால், சென்னை - லண்டன் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், தினமும் அதிகாலை 3.30 மணிக்கு, லண்டனில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டு, அதன் பின்பு சென்னையில் இருந்து மீண்டும் அதிகாலை 5.35 மணிக்கு, லண்டன் புறப்பட்டுச் செல்லும். அதேபோல் அந்த விமானம் நேற்று (ஆக.7) இரவு சுமார் 240 பயணிகளுடன், லண்டனில் இருந்து புறப்பட்டு, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது, இந்த விமானம் திடீரென நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, லண்டனுக்கே திரும்பி சென்று தரை இறங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின்பு, அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை உடனடியாக சரி செய்ய முடியாததால், லண்டன் - சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை - லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், இன்று (ஆக.8) பயணிப்பதற்காக, சுமார் 210 பயணிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, அதிகாலை 2.30 மணிக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தனர்.

ஆனால், லண்டனில் இருந்து சென்னை வரவேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும், இன்று (ஆக.8) ரத்து என்று அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து பயணிகள் சிலர் துபாய், தோகா, அபுதாபி வழியாக லண்டனுக்கு மாற்று விமானங்களில் புறப்பட்டு சென்றனர். ஆனால், ஒரு சில பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். இதை அடுத்து பயணிகள் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாளை (ஆக.9) அதிகாலை இந்த விமானம், சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் பயணம்!

ABOUT THE AUTHOR

...view details