கோவை:கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் பத்ம சேசாஸ்திரி (PSBB) தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்றிரவு (மார்ச் 3) இப்பள்ளியின் மின்னஞ்சலுக்கு வந்த இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த கோவை போலீசார், அதிகாலை 2 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில், சந்தேகத்திற்கும் இடமான வகையில் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. பள்ளியில் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டலினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் இன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன.