தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பாசிசம் என்றால் என்ன தெரியுமா?"- எச்.ராஜா கொடுத்த விளக்கம் இதுதான்! - BJP H RAJA ON UDHAYANIDHI STALIN

பாசிசம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? என்பதற்கு தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா புதிதாக விளக்கம் அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், எச்.ராஜா, விஜய்
உதயநிதி ஸ்டாலின், எச்.ராஜா, விஜய் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 4:42 PM IST

சென்னை:விஜய்யின் கட்சி கொள்கையை பார்த்தால் திமுகவின் கொள்கை போல் இருக்கிறது, இதற்கு விஜய் திமுகவில் சேர்ந்து விடலாம் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக அரசு கோயில் நிதியே தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றபோது அதன் நிறைவு விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி. இந்த மாநாடு ஆன்மீக மாநாடு இல்லை என்றார். அப்படியானால் அது என்ன அரசியல் மாநாடா? அந்த மாநாட்டிற்கு அவர் வருகை தருவதற்கு கட்டவுட் பேனர்கள் வைக்கப்பட்டது. இது ஆன்மீக நிகழ்ச்சி இல்லை என்றால் ஏன் கோவில் நிதியை தவறாக பயன்படுத்துகிறீர்கள்.

எச்.ராஜா பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

கட்டவுடுக்கு கோயில் நிதியா?சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் இந்து மதம் ஒரு கொசு போன்றவை அதை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார் ஆப்படியானால் ஏன் இந்த மாநாட்டிக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை அழைக்க வேண்டும்.

அதேபோன்று வருகின்ற ஏழாம் தேதி தஞ்சையில் நடைபெறும் ஆன்மீக மாநாட்டிற்கு உதயநிதி செல்ல இருக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பேனர்கள் கட்டவுட் வைப்பதற்கு கோவில் நிதியை பயன்படுத்தக் கூடாது. உங்கள் கட்சி நிதியை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விக்கிரவாண்டி நடைபெற்ற மாநாட்டை விட மிகப் பிரம்மாண்டமாக உதயநிதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஒரு அமைச்சர் தொண்டரிடம் குறிப்பிட்டு பேசியுள்ளார். இதற்கு கட்சி நிதியை செலவு செய்து கொள்ளட்டும் கோவில் நிதியை செலவு செய்யக் கூடாது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கோயிலில் தேவையற்ற செலவு செய்ய எந்தவிதமான அதிகாரமும் இல்லை.

இதையும் படிங்க:மரையூர் சத்திரத்தின் மோசமான நிலை; பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க கோரிக்கை!

பாசிசம் வார்த்தையை சிலர் பயன்படுத்துகின்றனர். அதற்கான அர்த்தம் தெரியுமா? அவர்களுக்கு என தெரியவில்லை. பாசிசம் என்றால் ஒரு கொள்கையினை மற்றவர்கள் மீது திணிப்பது தான். அதனை கம்யூனிஸ்டு கட்சி மற்றும் திராவிட கழக தான் செய்கிறது. நாங்கள் அதைப்போன்று எந்த செயலில் ஈடுபடவில்லை. அதற்கு உதாரணம் நாங்கள் மாற்றுக் கட்சி ஆளும் மாநில அரசுகளை கலைத்திருக்கிறோமா?

தவெக கொள்கை திமுக போல் உள்ளது:விஜய்யின் கட்சி கொள்கையை பார்த்தால் திமுகவின் கொள்கை போல் இருக்கிறது. விஜய் திமுகவில் சேர்ந்து விடலாம். அவர் நேற்று நிறைவேற்றியுள்ள தீர்மானம் நீட் தேர்வு பற்றி பேசி உள்ளார். நீட் தேர்வு காங்கிரஸ் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் நீட் தேர்வு 2013 தான் நடைபெற்றது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி 2014 இல் தான் ஆட்சிக்கு வந்தார். இதற்கும் பாஜகவுக்கு என்ன சம்பந்தம்?

குடும்பக் கட்சிகளுக்கான கூட்டணி இந்தியா கூட்டணி:கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது திமுக, காங்கிரஸ். தற்போது சர்வதேச ஒப்பந்தம் அடிப்படையில் கட்சித் தீவு இருக்கிறது, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. பேச்சு வார்த்தையின் மூலமாக ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம். இண்டி கூட்டணி என்ற பெயரில் இந்தியா முழுவதும் உள்ள குடும்பக் கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து இருக்கிறது. பாஜகவில் எத்தனை பி டீம் உள்ளது என தெரிவில்லை. முதலில் சீமானை எங்கள் டீம் என்றார்கள் தற்போது விஜய்யை கூறுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details