தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு! - Bhavanisagar Dam - BHAVANISAGAR DAM

Bhavanisagar Dam: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை (Credit -ETVBharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 8:45 AM IST

ஈரோடு:ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய வனத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது.

இதனால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. மேலும் நீர்வரத்து விநாடிக்கு 22 ஆயிரத்து 581 கன அடியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மாயாறும் -பவானி ஆறும் கூடுமிடத்தில் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு:தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய வனத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 18 ஆயிரம் கனஅடி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டதாலும் மாயாற்றில் 2வது நாளாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 22 ஆயிரத்து 581 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணை நிலவரம்:நீர் அதிகரித்துள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 74.48 அடி, நீர்வரத்து 22,561 கனஅடி, நீர் இருப்பு 12.93 மற்றும் நீர் வெளியேற்றம் 1105 கன அடியாக உள்ளது.

அவலாஞ்சி, அப்பர் பவானி பகுதியில் மழையளவு 300 மிமீ ஆக இருப்பதால் பில்லூர் அணைக்கு தொடர்ந்து உபரிநீர் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் 4000 கனஅடிநீர் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது.

இதையும் படிங்க:தமிழ் வழிக்கல்வி பயிலும் நாகலாந்து மாணவி.. சிவகங்கையில் சாத்தியமானது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details