தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்; அரசுக்கு எதிராக பர்கூர் மலைவாழ் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! - அந்தியூர் வனப்பகுதி

Erode protest: அந்தியூர் வனப்பகுதியை தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயமாக அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும் என்று, பர்கூர் மலைவாழ் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பர்கூர் மலைவாழ் மக்கள்
பர்கூர் மலைவாழ் மக்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 12:12 PM IST

பர்கூர் மலைவாழ் மக்கள்

ஈரோடு:ஈரோடு, அந்தியூர் அடுத்த மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் அமைந்துள்ளது, பர்கூர் மலை. இப்பகுதியில் 32க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில், சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து, தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்ததன்படி அந்தியூர், பர்கூர், தட்டக்கரை‍, சென்னம்பட்டி ஆகிய பர்கூர் மலை மற்றும் கோபிசெட்டிபாளையம் தாலுகாவில் உள்ள 80 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதியை தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயமாக தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம், 2006-இன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்படுவதாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். இதனால், வனவிலங்கு சரணாலய அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, ஈரோடு பர்கூர் மலைவாழ் மக்கள், வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் பிப்ரவரி 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பர்கூர் மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். அதன்படி, நேற்று பர்கூர் மலைவாழ் மக்கள் மற்றும் அனைத்துக் கட்சி சார்பில், தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயமாக அறிவித்ததை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும், 2006 வன உரிமைச் சட்டத்தின்படி, வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், 300க்கும் மேற்பட்டோர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு பழங்குடியினர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.பி.குணசேகரன் கூறுகையில், “2006 வன உரிமைச் சட்டம் அறிவிக்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகிறது. இந்தச் சட்டமானது, வனத்தை நம்பி வாழும் பழங்குடியின மக்கள், வனத்தின் காவலர்கள் என்றும் வனத்தை பாதுகாப்பது, மேம்படுத்துவது மற்றும் வளர்ப்பது, அவர்களின் பொறுப்பு என்றும் கூறுகிறது. ஆனால், மக்களின் ஒப்புதல் பெறாமல் வன உரிமைச் சட்டத்திற்கு எதிராக, தந்தை பெரியார் பெயரில் வனவிலங்கு சரணாலயமாக அறிவித்திருப்பது வேதனைக்குரியது.

வனவிலங்கு சரணாலயமாக அறிவித்ததன் காரணமாக, மக்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய கால்நடைகளை வனப்பகுதிக்குள் சென்று மேய்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடும் வகையில், 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி, வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் ”என்று கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details