தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; பிரபல ரவுடி நாகேந்திரன் கைது! - ARMSTRONG MURDER CASE - ARMSTRONG MURDER CASE

Armstrong Murder Case Update: வேலூர் மத்திய சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இன்று கைது (ஃபார்மாலிட்டி அரஸ்ட்) செய்யப்பட்டுள்ளார்.

ரவுடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங்
ரவுடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 6:26 PM IST

சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞரணி நிர்வாகி அஸ்வத்தாமன் இக்கொலை வழக்கிவ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிவையில் அஸ்வத்தாமனின் தந்தையான பிரபல ரவுடி நாகேந்திரனுக்கும் இந்த கொலை வழக்கிற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

ரவுடி நாகேந்திரன் ஏற்கனவே வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நிலையில், இந்த கொலைக்கு நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நாகேந்திரனின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

மேலும் கடந்த ஒரு ஆண்டுகளாக நாகேந்திரன் எத்தனை நபர்களை சிறையில் சந்தித்தார், அவர் யாரிடம் எல்லாம் உரையாடினார், அவர் மருத்துவமனைக்கு செல்லும்போது யாரை சந்தித்தார், என காவலர் வைத்திருக்கும் சிறப்பு ரெக்கார்டிங் டிவைஸ் மூலம் தற்போது அவற்றஐ ஆய்வு செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பரபரப்பான விசாரணை களத்தில், இன்று ரவுடி நாகேந்திரனை காவல்துறையினர் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது வேலூர் மத்திய சிறையில் உள்ள நாகேந்திரனை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் இன்று கைது (ஃபார்மாலிட்டி அரஸ்ட்) செய்துள்ளனர்.

கையெழுத்திட மறுத்த நாகேந்திரன்:ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக வேலூர் சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரனை சென்னை காவல் துறை கைது செய்ய, சம்பிரதாய கைதானதற்கான ஆணையை நாகேந்திரனிடம் வழங்கப்பட்டது. அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எனக்கு சம்பந்தமில்லை என்று நாகேந்திரன் ரகளை செய்ததாகவும், கைது குறிப்பு ஆணையில் நாகேந்திரன் கையெழுத்து போடவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செம்பியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அரெஸ்ட் வாரண்ட்டை வேலூர் மத்திய சிறையில் வழங்கி, நாகேந்திரன் கைது செய்யதுள்ளார். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 23 நபர் கைதான நிலையில், நாகேந்திரன் 24-ஆவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டது பிரபல ரவுடி நாகேந்திரனா?

ABOUT THE AUTHOR

...view details