தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! - MLA AMMAN ARJUNAN

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகின்றனர்.

அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன்
அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2025, 8:33 AM IST

கோவை: கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க சட்ட மன்ற உறுபினராக இருப்பவர் அம்மன் கே அர்ஜுனன். அ.தி.மு.க வில் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். முந்தைய சட்டமன்றத்தில் கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு கால கட்டத்தில் வருவாய்க்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனனின் கோவை, செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அம்மன் அர்ஜுனன் வீட்டில் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் அம்மன் அர்ஜூனன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை ஏவியுள்ள மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. நாடறிந்த "ஊழல் திலகங்களான" இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்சனைகளையும், அதனை சரி செய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசை திருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது "லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை".

இதையும் படிங்க:வெள்ளியங்கிரி மலையில் தவெக கொடி… வனத்துறை தீவிர விசாரணை!

அதிலும் கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் knee jerk reaction தான் நம் கழக சட்டமன்ற உறுப்பினர் மீது எவப்பட்டுள்ள இந்த சோதனை. இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அம்மன் அர்ஜூனன் திறம்பட செய்து வரும் கழகப்பணியை தடுக்கும் விதமாக , லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது” என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details