தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர் மன்னிப்பு.. "இரவு முழுவதும் தூக்கமே இல்லை" என வேதனை - annapoorna srinivasan - ANNAPOORNA SRINIVASAN

கோவையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசிய வீடியோ வைரலான நிலையில், அன்னபூர்ணா குழும உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன்
நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 10:25 AM IST

கோயம்புத்தூர்: கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) தொழில் முனைவோர் உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசிய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், ஜிஎஸ்டியில் இருக்கும் பிரச்சினைகளை கோவையின் பிரபல தொழிலதிபர் அன்னபூர்ணா சீனிவாசன் சுட்டிக்காட்டி பேசினார்.

நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர் மன்னிப்பு கேட்ட வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது அவர், பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை ஆனால் பன்னுக்குள் வைக்கும் கிரீம், ஜாமுக்கு 18% ஜிஎஸ்டியா? என பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோ சர்ச்சையான நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், அவர் ஜனரஞ்சகமாக பேசியதால் அனைவரும் சிரித்தனர். இதுபோன்ற விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படுவதில்லை என பதிலளித்தார். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கோரியுள்ளார்.

அதாவது, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரை அன்னபூர்ணா சீனிவாசன் நேரில் சந்தித்தார். அப்போது "ஹோட்டல் அசோசியேசன் சார்பில் என்னை பேசச் சொன்னார்கள், நான் மீட்டிங்கிற்கு கூட வரவில்லை என்றுதான் சொன்னேன், ஆனால் பேச வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது.

இதையும் படிங்க: திடீரென்னு டென்ஷனான அமைச்சர் நிர்மலா சீதாராமன்! அப்படி என்ன கேட்டுட்டாரு அந்த கோவை இளைஞர்?

மேலும், நீங்க வயதில் பெரியவங்க, தயவுசெய்து மன்னித்து விடுங்கள் என இருக்கையிலிருந்து எழுத்து நின்று இரு கைகளையும் கூப்பி நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரினார். அப்போது, நான் எந்த பார்ட்டியிலும் இல்லை என நிதி அமைச்சரிடம் தெரிவித்த அவர், ஒரு தாழ்மையான வேண்டுகோள் எனக் கோரிக்கையினை தெரிவித்தார்.

தமிழகத்தில் சின்ன கடை, பெரிய கடை என அனைத்து ஓட்டல் கடைகளைச் சேர்ந்தவர்களையும் அழைத்து ஒரு மீட்டிங் போடுகிறோம். அதில், நீங்கள் வந்து கலந்து கொண்டீர்கள் என்றால் சந்தோஷமாக இருக்கும். எனது தந்தை சுதந்திரப் போராட்டத் தியாகியாக இருந்தவர். நான் உங்கள் மனதைப் புண்படுத்திவிட்டேன். இரவு முழுவதும் தூக்கமே இல்லை. வீடியோ தொடர்பாகக் காலையிலிருந்து நிறையப் பத்திரிகையாளர்கள் என்னை அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களை எல்லாம் தவிர்த்து விட்டேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து அவரிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "உள் நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் பற்றி, நல்லதோ கெட்டதோ வெளியில் பேசக்கூடாது” என அறிவுரை வழங்கினார்.

மேலும், எடுத்த எடுப்பில் நீங்கள் உங்கள் எம்எல்ஏ-வை பற்றி ஜிலேபி சாப்பிடுறாங்க, சண்டை போடுறாங்க, ரெகுலராக வருவாங்க என சொன்னவுடன் எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை எனக்கூறிய அவர், நீங்கள் ஜிஎஸ்டி பற்றி என்ன கேட்டாலும் பதில் சொல்லி இருப்பேன் என தெரிவித்தார். அமைச்சர்கள் குழுவினர்தான் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று நேரில் பார்த்து ஜிஎஸ்டி குறித்து முடிவு செய்வார்கள் எனவும் அவருக்கு விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் கோவையின் பிரபல தொழிலதிபரான அன்னபூர்ணா சீனிவாசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சிகளை பாஜகவைச் சார்ந்த ஐடி விங் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details