சென்னை:இந்தோனேஷியாவின் தலைநகரமான ஜகார்தாவில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஶ்ரீ சனாதன தர்ம கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக கலந்து கொண்டார். இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்தோனேஷியா நாட்டின் தலைநகரமான ஜகார்தா நகரத்தில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள, முருகப் பெருமானின் ஶ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழாவுக்கு, காணொளி வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கும் போது, “முருகனுக்கு அரோகரா” என்று தமிழில் தொடங்கியது, பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.