சென்னை:அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பெயரில் வாட்ஸ்ஆப்களில் தகவல்கள் அனுப்பப்படுவது போலியானது என துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், "சில மோசடி செய்பவர்கள் என்னிடமிருந்து வந்ததைப் போல WhatsApp செய்திகளை அனுப்புகிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். பெயர், புகைப்படம் மற்றும் போலி மின்னஞ்சல் ஐடி ஆகியவை மோசடி செய்பவர்களால் ஏமாற்ற பயன்படுத்தப்படுகின்றன.
தனது பெயரில் இதுபோன்ற செய்தி அல்லது மின்னஞ்சலைப் பெற்றால் கவனமாக இருப்பதுடன், மோசடிகளுக்கு நீங்கள் பலியாகாமல் இருக்க வேண்டும். மேலும், இதுபோன்ற செய்திகளை நீங்கள் கண்டால் மோசடி செய்பவர்களுக்கு பதிலளிப்பதை நிறுத்த வேண்டும். இதனை மோசடி புகாரளித்து தடுக்கலாம்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் சில ஆசிரியர்கள் போலி ஆதார் அட்டைகள் மற்றும் பான் கார்டுகளை வழங்கியதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கான (web portal) வெப் போர்டலில் அனைத்து விவரங்களுடனும் ஆசிரியர் தரவுதளத்தை வெளிப்படையாக வெளியிட்டுள்ளோம்.
தனியார் நிறுவனம் இந்த இணையதள போர்ட்டலைப் பயன்படுத்தி சில ஆசிரியர்களின் ஆதாரங்கள் போலியானது என கண்டுபிடித்து புகாரளித்தது. அந்தப் புகாரைத் தொடர்ந்து, நாங்கள் விசாரணை நடத்தி ஆசிரியர்கள் செய்த தவறுகள் அனைத்தையும் கண்டுபிடித்தோம். அந்த ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம். இந்த மோசடியில் ஈடுபட்ட கல்லூரிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:பட்ஜெட் விவகாரம்; மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல் போராட்டம்! - budget issue