சென்னை:தமிழ்நாட்டின் துணை முதமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. மேலும், 3 அமைச்சர்களை நீக்கி 6 அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக அமைச்சராக பதவியேற்க உள்ளவர்களும், இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்களும் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் மற்றும் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்களான தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மதிவேந்தன் உள்ளிட்ட அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை ஒட்டி அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “திமுக மூத்த தலைவர்கள் முதல் கடைசித் தொண்டன் வரை நீண்ட காலமாக எதிர்பார்த்த மாற்றம்தான் இது. முதலமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவித்ததில் திமுகவில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி.