தூத்துக்குடி:குலசேகரன்பட்டினம் பகுதியில் அமைய உள்ள இஸ்ரோ நிறுவனத்தின் 2வது ராக்கெட் ஏவுதளம் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளிதழ்களுக்கு அளித்த விளம்பரத்தில் இடம்பெற்ற ராக்கெட்டில், சீன கொடி அச்சிடப்பட்டு இருந்தது தெரியாமல் நடந்த சிறு தவறு, அது வேறு எந்த நோக்கத்துடனும் செய்யப்படவில்லை என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட, என் மன் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்று, பின் தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள இஸ்ரோ நிறுவனத்தின் 2வது ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிலையில், குலசேகரன்பட்டினம் பகுதியில் அமைய இருக்கும் ராக்கெட் ஏவுதளம் தொடர்பான விளம்பரத்தை நாளிதழில் போட்டதில், சீன கொடியுடன் அச்சிடப்பட்டிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, இது குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (பிப்.29) செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.