சென்னை:அம்பத்தூர் காவல் நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த அம்பத்தூர் நீதிமன்றம் எதிரே டன்லப் மைதானம் அமைந்துள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட டன்லப் தொழிற்சாலை மூடப்பட்டு பாழடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில், அங்கு பெண் ஒருவரின் உடல் நிர்வாணமான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற அம்பத்தூர் போலீசார், இறந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், இறந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கும் எனவும், இறந்து 2 நாட்களான நிலையில் உடலில் பல்வேறு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உடல் அழுகிய நிலையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், இறந்த பெண்ணை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:3 மாநில போலீசாரை திக்குமுக்காட வைத்த 13 வயது சிறுமி.. இறுதியாக மீட்கப்பட்டது எப்படி?