மதுரை: சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அபி சித்தர். இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "பொங்கல் பண்டிகையையொட்டி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டிக்காக முறையாக ஆன்லைனில் பதிவு செய்து, உடல் தகுதி சோதனையில் கலந்து கொண்டு 2வது சுற்றில் மாடுபிடி வீரராக கலந்து கொண்டேன். 3வது சுற்று வரை 11 காளைகளை அடக்கி விழாக்கமிட்டியால் இறுதிச்சுற்றில் விளையாட வைப்பதாகக் கூறி வெளியேற்றப்பட்டேன்.
பின்பு கடைசி சுற்றில் 7 மாடுகளை பிடித்தேன். மொத்தமாக 18 காளைகளை அடக்கினேன். ஆனால் விழா கமிட்டி கருப்பாயூரணியைச் சேர்ந்த மாடுபிடி வீரரான கார்த்திக் 18 காளைகளை அடக்கியதாக கூறி முதல் பரிசை அவருக்கு அறிவித்தனர். இதுகுறித்து விழா கமிட்டியினரிடம் முறையிட்டும் எனக்கு தகுந்த நீதி கிடைக்கவில்லை.