தேனி:தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு முறைகேடாக மணல், ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கனிம வளங்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக இருந்து வந்துள்ளது. இதில், குவாரி உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கனிமங்களை வெட்டி கேரளாவிற்கு முறைகேடான வகையில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், போலி பாஸ் அடித்து தேனியிலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், தேனி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து புகார் அளித்த கட்சியின் மாவட்டச் செயலாளர் முருகன் கூறுகையில், “தேனி மாவட்டத்தில் இருந்து அதிக அளவிலான கனிம வளங்கள் போலி பாஸ் மூலமாக கேராளாவிற்கு கடத்தப்படுகிறது. முன்னதாக, எம்.சாண்ட் 1 யூனிட் ரூ.2 ஆயிரத்திற்கு வழங்கினர். ஆனால், தற்போது ஒரு யூனிட் எம்.சாண்ட் விலை ரூ.4 ஆயிரம். மேலும், கனிமவளத்துறையின் சார்பில் 2,000 யூனிட்டற்கு மட்டும் பாஸ் வழங்கப்படுகிறது.