தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தல் 2024: 18 தொகுதிகளில் நேரடியாக மல்லுக்கட்டும் திமுக - அதிமுக.. முக்கிய புள்ளிகள் யார் யார்? - admk vs dmk candidates - ADMK VS DMK CANDIDATES

lok sabha poll 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. இதில் தென் சென்னை, வட சென்னை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 1:34 PM IST

சென்னை:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதேபோல் அதிமுக கூட்டணியில் தலைமை வகிக்கும் அதிமுக 33 தொகுதிகளுக்கு தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பணிகளை தொடங்கியுள்ளது. பாஜக கூட்டணி இன்னும் தொகுதி பங்கீட்டையே இறுதி செய்யாமல் உள்ளது.

இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் அடிப்படையில் அதிமுகவும், திமுகவும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதவுள்ளது.

வ.எண் தொகுதி திமுக வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்கள்
1 வட சென்னை கலாநிதி வீராசாமி ராயபுரம் மனோ
2 தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் டாக்டர் ஜெயவர்தன்
3 ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்.பாலு டாக்டர் பிரேம் குமார்
4 காஞ்சிபுரம்(தனி) வழக்கறிஞர் செல்வம் ராஜசேகர்
5 அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ஏ.எல்.விஜயன்
6 வேலூர் கதிர் ஆனந்த் டாக்டர் எஸ்.பசுபதி
7 தருமபுரி ஆ.மணி டாக்டர் அசோகன்
8 திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை கலியபெருமாள்
9 ஆரணி தரணி வேந்தன் கஜேந்திரன்
10 கள்ளக்குறிச்சி மலையரசன் குமரகுரு
11 சேலம் டி.எம்.செல்வகணபதி விக்னேஷ்
12 ஈரோடு கே.இ.பிரகாஷ் ஆற்றல் அசோக் குமார்
13 நீலகிரி(தனி) ஆ.ராசா லோகேஷ் தமிழ்செல்வன்
14 கோயம்புத்தூர் கணபதி பி.ராஜ்குமார் சிங்கை ராமச்சந்திரன்
15 பொள்ளாச்சி ஈஸ்வரசாமி கார்த்திக் அப்புசாமி
16 பெரம்பலூர் அருண் நேரு சந்திரமோகன்
17 தேனி தங்க தமிழ்ச்செல்வன் டாக்டர் நாராயணசாமி
18 தூத்துக்குடி கனிமொழி கருணாநிதி சிவசாமி வேலுசாமி

இதில், வட சென்னை, தென் சென்னை, நீலகிரி, தூத்துக்குடி, வேலூர், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், உள்ளிட்ட தொகுதிகள் முக்கிய புள்ளிகள் போட்டியிடும் தொகுதிகள் என்பதால் அதிக கவனம் பெற்றுள்ளன.

இரட்டை இலை vs கை:அதேபோல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய ஏழு தொகுதிகளில் அதிமுக நேரடியாக எதிர்கொள்கிறது.

ABOUT THE AUTHOR

...view details