தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“இலங்கை அணி தோற்றதால் இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு” - ஜெயக்குமார் பேச்சு! - Jayakumar about Fishermen arrest - JAYAKUMAR ABOUT FISHERMEN ARREST

Ex Minister Jayakumar Criticized Cm: கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் இலங்கை தோற்கடிக்கப்பட்ட ஒரே காரணத்தால் தான் இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 4:59 PM IST

சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, அதிமுக சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை திருவுருப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் வெளிநாடு பயணம் செல்வதற்கான Hidden agenda திட்டப் பணிகள் என்னென்ன வைத்துள்ளார் என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதித்துள்ளனர். மின்வெட்டு ஏற்படுவதால் தொழிற்சாலைகளிலும் தொழில்கள் கடுமையாக முடங்கி உள்ளன.

தமிழகத்தில் மீன்பிடி தொழில் என்பது பாதுகாப்பானதாக இல்லை. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் இலங்கை தோற்கடிக்கப்பட்ட ஒரே காரணத்தால் தான் இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை தடுக்க தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதை தவிர வேறு எந்த அழுத்தமும் மத்திய அரசுக்கு இதுவரை கொடுக்கவில்லை. ஆளுநர் பதவி நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசுகையில், முதலமைச்சருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் ஆக வேண்டும் என்ற ஆசை வேறு இருக்கிறதா? ஆளுநர் பதவி நீட்டிப்பு விவகாரம் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:“மத்திய அரசே பேரிடராக இருக்கிறது.. அப்போ எப்படி?” - கனிமொழி விமர்சனம்! - wayanad landslide

ABOUT THE AUTHOR

...view details