தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

ETV Bharat / state

"பருவமழை தொடங்கும் நேரத்தில் வடிகால் பணி".. தமிழக அரசை கடுமையாக சாடிய அதிமுக முன்னாள் அமைச்சர்! - d jayakumar aiadmk

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திமுக எம்.பி வில்சன் பேசிய வார்த்தைகள், திமுக அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்

டி.ஜெயக்குமார் கோப்புப்படம்
டி.ஜெயக்குமார் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:மகாத்மா காந்தியின் 156வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் அமைச்சர் டி.ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது, "அராஜகத்தின் உச்சக்கட்டமாக திமுக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், கருணாநிதி முதல் தற்போதைய திமுக எம்.பி வில்சன் வரை நீதிமன்றத்தை அவமதித்துப் பேசுவது திமுகவினருக்கு புதிதான ஒன்று அல்ல.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பான வழக்கு ஒன்றில் ஆஜரான திமுக எம்பி வில்சன் பேசிய பேச்சு, ஜனநாயக நாட்டில் நீதிமன்றம், பத்திரிக்கை என எதுவும் இல்லாதது போல் இருப்பதாகவும், இது திமுகவினருக்கு அழிவை நோக்கிச் செல்லக்கூடிய காலம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"அதிமுகவின் வாக்கு இன்னும் குறையத்தான் செய்யும்" - திமுக அமைச்சர் ரகுபதி காட்டம்!

இன்று காந்தி ஜெயந்தி, ஆனால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுகவினர் கலந்து கொள்வது, ஜீவகாருண்ய மாநாட்டில் கசாப்பு கடைக்காரன் கலந்து கொண்டது போல இருப்பதாக விமர்சித்தார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் பணிகள் செய்து வரும் ஸ்டாலின் அரசு, முறையாக அந்த பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், குண்டும் குழியுமாக பணிகளை மேற்கொள்வதால் மழை நீர் முறையாக வெளியேறுவதற்கு போதிய வசதி இல்லாமல் தேங்கிக் கிடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பருவமழை தொடங்கும் நேரத்தில் வடிகால்வாய் பணிகளை மேற்கொள்வது அறிவுள்ள அரசாங்கத்துக்கு சான்றா? என டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details