தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜய் கட்சிக்கு தாவுகிறாரா அதிமுக முக்கிய பிரமுகர்? எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன? - Palaniswami on Senji Ramachandran - PALANISWAMI ON SENJI RAMACHANDRAN

Palaniswami on Senji Ramachandran To TVK: ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் முழுமையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 6:04 PM IST

சேலம்:சேலம் ரெட்டியூர் நரசோதிபட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி கோவில் மற்றும் ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் மற்றும் ராஜ கணபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளில் முழுமையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது அரசின் கடமை. பரந்தூர் விமான நிலைய பணிகள் துவங்கி விட்டது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக அரசு விவசாயிகளை அழைத்து பேசு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

ஒரு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிவு எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சரியாக கவனிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நாங்கள் சுட்டிக் காட்டியும் குறைகளை ஆய்வு செய்து சரி செய்வதை விட்டுவிட்டு, எனக்கு எதிராக அமைச்சர்கள் குறை சொல்லி வருவதில் கவன செலுத்துகின்றனர்.

மேலும் செஞ்சி ராமச்சந்திரன் அ.தி.மு.கவிலிருந்து விலகி த.வெ.கவிற்கு செல்கிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அவர் சொன்னாரா? இது வதந்தி; அதிமுக மிகப்பெரிய கடல். ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக” என்று ஈபிஎஸ் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:கோடநாடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மான நஷ்ட ஈடு வழக்கு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details