தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காய்ச்சலா? அரசு மருத்துவமனைக்கு சென்றால் அட்மிஷன்.. டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு! - FEVER

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளைக்கு ஜுரம், காய்ச்சல் என வருபவர்கள், மருத்துவத் துறை அதிகாரி கூறியதைப் போல உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவர் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அரசு மருத்துவர்கள் சங்கம் லோகோ
அரசு மருத்துவர்கள் சங்கம் லோகோ (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 8:44 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் மற்றும் பொதுச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்ற வாரம் மருத்துவக் கல்லூரி டீன் கள ஆய்வில் ஒரு உயர் அதிகாரி காய்ச்சல் கண்ட நோயாளி யாரும் இறக்கக்கூடாது.

இறந்தால் துறை மருத்துவர் மீதும் டீன்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார். மேலும் ஒரு நாள் காய்ச்சல் என்று வரும் நோயாளிகளை கூட அரசு மருத்துவ மனைகளில் கட்டாயமாக அட்மிஷன் செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார். இதுபோல பல திட்டத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் யாரையும் மதிக்காமல் பல ஆணைகளை பிறப்பித்த அவரின் நடவடிக்கைகளை கண்டித்து அரசு மருத்துவர்கள் போராட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் நாளை (26.11.24) அன்று இவரின் ஆணையை பின்பற்ற தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தமிழகம் எங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு நாளை வரும் ஜுரம், காய்ச்சல் நோயாளிகளை இந்த அதிகாரி கூறியதைப் போல உள்நோயாளியாக அட்மிஷன் செய்யும் போராட்டம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:"மருத்துவர்கள் யாருமே மகிழ்ச்சியுடன் இல்லை" - அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு கடிதம்!

மருத்துவ உண்மை:பொதுவாக பருவநிலைக்கேற்ப காய்ச்சல் நோய்கள் எண்ணிக்கை கூடுதலாகவோ குறையவோ வரக்கூடும். தற்போது சளி காய்ச்சல் எண்ணிக்கை பருவ நிலை மாற்றங்களால் கூடுதலாகவே மாநிலம் முழுவதும் காணப்படுகிறது. இவை பெரும்பாலும் இரண்டு நாள் முதல் ஐந்து நாள் வரை இருந்து சரியாகிவிடும். இவற்றிற்கு நிவாரணிகள் அளித்தால் மட்டுமே போதும்.

இதனுடன் சேர்ந்து ஆபத்தான மூளை காய்ச்சல், டெங்கு காய்ச்சல், நிமோனியா, டைபாய்டு போன்ற காய்ச்சல்களும் வரலாம். சளியால் வரும் காய்ச்சல்களை ஒப்பிடும்போது இவை குறைந்த சதவீதத்தில் தற்போது காணப்படுகிறது. டெங்கு காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் நோய்களை முதல் நாளில் கண்டுபிடிப்பது கடினம்.

அந்த நோயாளிகளை ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் பொதுவாக அட்மிட் செய்வது வழக்கம். பெரும்பாலான நோயாளிகளுக்கு 99 சதவீதம் அப்போதும் கூட வெளி நோயாளிகளாகலே சிகிச்சை அளிக்கலாம். நோயாளிகளின் தேவைக்கேற்ப அவர்களை அட்மிட் செய்வதே வழக்கம் ஆனால் மூளைக்காய்ச்சல், நிமோனியா காய்ச்சல், சில ஃப்ளுக் காய்ச்சல் போன்றவை தீவிரமாக இருந்தால் முதல் நாளிலேயே கண்டுபிடிக்க முடியும். அப்போது அவர்களை அட்மிட் செய்வோம்.

தற்போதைய பருவநிலையில் சராசரியாக 10% நோயாளிகள் (குறிப்பாக குழந்தைகள்) பொது மருத்துவத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் , தாலுகா, மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இவர்கள் அனைவரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டால் நாள் ஒன்றுக்கு சுமார் 10000 பேர் அனுமதிக்க வேண்டும்.

காய்ச்சல் நோயாளிகளை சங்க தீர்மானத்தை ஒட்டி மாநிலம் முழுவதும் நாளை ஒரு நாள் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அட்மிட் செய்ய நோயாளிகளை அறிவுறுத்துவார்கள். (95 சதவீத நோயாளிகள் அட்மிட் ஆக ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றாலும்). உயர் அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகத்தில் மருத்துவர்களை கொடுமைப்படுத்துகின்றனர் எனும் இந்தப் போராட்டத்தில் உயர் அதிகாரிகளின் எதார்த்தத்திற்கு உதவாத அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவே இந்தப் போராட்டம். ஆணைகளை நோயாளிகளின் விருத்திற்கு எதிராக எந்த ஒரு நோயாளியும் அட்மிட் செய்யப்பட மாட்டார் என அதில் கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details