நடிகை நமீதாவின் பேட்டி (Credit: ETV Bharat Tamil Nadu) சென்னை: நடிகை நமிதா இன்று (மே 10) தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்த நடிகை நமிதா, "இன்று எனது பிறந்த நாள். அதனால் கோயிலில் பூஜை செய்து வழிபட்டு வருகிறேன். பிறந்தநாளில் கடவுளின் ஆசிர்வாதம் மற்றும் அம்மா, அப்பவின் ஆசிர்வாதம் மிகவும் முக்கியம். மேலும், அன்னதானம் செய்யப் போகிறேன். தாமரை - மஹாலக்ஷ்மி சின்னம். இன்று அட்சய திருதி. மஹாலக்ஷ்மி அம்மனை பாருங்கள், அது தான் என் கையில் உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 10 நாட்களாக தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு நேற்று தான் எனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வந்தேன். இதனைத் தொடர்ந்து ஒடிசா, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பெரும்பான்மையில் வரும். மேலும், நம் நாட்டில் எல்லா இடங்களிலும் பாஜக தான் இருக்கப் போகிறது" எனத் தெரிவித்தார்.
பிரஜ்வல் ரேவண்ணா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நமீதா, “பூஜைக்காக தான் வந்தேன். பிரசாரத்தில் பிஸியாக இருக்கிறேன். இன்னும் பிரச்சாரம் போக வேண்டும். அதற்கான யாத்திரை துவங்க வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் தவறு இருந்தால் நீதிமன்றம் முடிவெடுக்கும். இதில் நான் என்ன சொல்வது?” என்று கூறினார்.
இதையும் படிங்க:பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்திய விவசாயிகள்.. காரணம் என்ன? - Farmers Protest In Thanjavur