தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியலுக்கு வருகிறாரா ராகவா லாரன்ஸ்? - அதிர்ச்சியடைய வைத்த பதில்! - actor Raghava lawrence - ACTOR RAGHAVA LAWRENCE

Raghava lawrence: கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவிக்கு மேற்படிப்புக்காக நிதியுதவி வழங்கினார் நடிகர் ராகவா லாரன்ஸ். மேலும், எதிர்காலத்தில் அரசியல் வருவதற்கான எந்த நோக்கமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நிதி உதவி வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் புகைப்படம்
நிதி உதவி வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 4:31 PM IST

சென்னை: கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மாணவி வர்ஷினி, 12ஆம் வகுப்பில் 592 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மாணவிக்கு தனியார் கல்லூரியில் சீட்டு கிடைக்காத நிலையில், நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா மூலமாக நடிகர் ராகவா லாரன்ஸ்-க்கு தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu)

இதனையடுத்து, தனியார் கல்லூரியில் மாணவி விருப்பப்பட்ட படிப்பிற்கு தேவையான நிதியை, மாணவியின் வீடு தேடிச் சென்று நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார். இதற்கு முன்னதாக மாணவியின் வீடு தேடி வந்த ராகவா லாரன்ஸ்-க்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ், "என்னைப் பார்த்து இன்னும் பலர் மக்களுக்கு உதவி செய்வார்கள் என்பதற்காக தான் வெளிப்படையாக அனைவருக்கும் உதவி செய்கின்றேன். வீடு தேடிச் சென்று உதவிகளைச் செய்வதில் எனக்கு ஒரு சந்தோஷம் உள்ளது. அதிலும், வடசென்னை நான் பிறந்த இடம். இங்கு மக்கள் ஆரவாரமாக என்னை வரவேற்று, என்னிடம் கோரிக்கை மனுக்களையும் கொடுத்துள்ளனர்.

இதே போன்று கிராமங்களுக்குச் சென்றால் என்னிடம் ஏகப்பட்ட மனுக்கள் இருக்கின்றது. அதை படிக்க படிக்க அவ்வளவு கஷ்டங்கள் உள்ளது. என்னால் முடிந்தளவு யாரிடம் பணம் பெறாமல், எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அந்த அளவிற்கு நான் உதவி செய்வேன்.

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, எதிர் காலத்தில் அரசியல் வருவதற்கான எந்த நோக்கமும் இல்லை. மாற்றம் என்பது தன்னலமற்ற சேவை, எதிர்பார்த்து செய்தால் அவை மாற்றமாக இருக்காது. இவை கடவுளுக்குச் செய்யும் சேவை; அரசியலுக்காக செய்கிறேன் என சிலர் நினைக்கலாம். அவர்கள் அனைவரும் போக போக புரிந்துகொள்வார்கள்.

இந்த உலகத்தில் ஏதாவது செய்தால் ஏதாவது எதிர்பார்ப்பார்கள் என பழகிப் போய்விட்டது. எனவே, போக போக என்னுடைய எண்ணத்தை புரிந்து கொள்வார்கள். இந்த மாணவிக்கு தற்பொழுது நிதி உதவி கிடைக்கவில்லை என்றால், 12ஆம் வகுப்புடன் நிறுத்தி இருப்பார்கள். எனவே, இந்த மாணவியிடம் நான் கேட்பது படித்து பெரிய ஆளாகி அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்பது தான்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ட்ரை-சைக்கிள் மீது கார் மோதி விபத்து; சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு! - Thoothukudi Tricycle Accident

ABOUT THE AUTHOR

...view details