கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் புருக்பீல்டு மால் எதிரே உள்ள காமராஜபுரம் பின்புறம், கடந்த 1961ஆம் ஆண்டில் 3.50 ஏக்கரில் லேஅவுட் மனைப் பிரிவு தனியாரால் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 40 அடி, சாலைக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த 40 அடி சாலையை ஒரு தரப்பினர் போலி பத்திரங்கள் தயாரித்து ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, அங்கு மனை வாங்கிய பொன்னுசாமி என்பவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அது டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பின்னர், 2001-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, 2017 வரை நிலுவையில் இருந்தது. பின்னர், சமூக செயற்பாட்டாளர் தியாகராஜன், மாநகராட்சியிடம் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கப் புகார் அளித்தார். அதில், நடவடிக்கை இல்லாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017-இல் வழக்குத் தொடுக்கப்பட்டது.