சேலம்:மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி தேக்கும் தேங்கர் டேங்க் சரிந்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் இருவர் பலியாகினர். படுகாயமடைந்த மூன்று தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
நிலக்கரி டேங்க் சரிந்து விழுந்த விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் ஆனது. தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் மற்றஉம் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது நிலக்கரி குவியலில் வெங்கடேசன், பழனிசாமி ஆகிய இரண்டு தொழிலாளர்களின் உடல் மீட்கப்பட்டது. இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து இருவரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.