சென்னை:தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து, கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி, 17 மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதிகாலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் வந்து, ராமேஸ்வரம் மீனவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி, 17 மீனவர்களையும் கைது செய்தனர்.
அதோடு படகுகள், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்து, மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 17 மீனவர்களையும் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதங்கள் எழுதி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:"ஒரு கல்லூரி முதல்வரையே தனியாக வந்து பாருங்கள் எனக் கூறுவது அநாகரிகம்"- முன் ஜாமீன் மறுப்பு!