சென்னை: மடிப்பாக்கம் குபேரன் நகரில் உள்ள வீட்டின் முதல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தவர் லின்சி பிளஸினா (26). இவர் நங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், இவரது வீட்டில் சமையல் கேஸ் தீர்ந்துள்ளது. இதனால், லின்சி தன்னுடன் வேலை பார்க்கும் கௌரிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரிடம் சிலிண்டர் கேட்டுள்ளார். அதன் பேரில் கடந்த 7 ஆம் தேதி இரவு மணிகண்டன் அவரது வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை கொண்டு வந்து, லின்சி வீட்டில் பொருத்தியுள்ளார். அதனை அடுத்து கேஸ் அடுப்பை பற்ற வைத்தபோது கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'கொள்ளையிலும் பொண்டாட்டி பாலிசி'.. தாம்பரம் 50 சவரன் நகை திருட்டு சம்பவத்தில் தம்பதி கொடுத்த ஷாக்!