தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா கடத்தல் வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை - சிறப்பு நீதிமன்றம் அதிரடி! - Ganja Smuggling Case - GANJA SMUGGLING CASE

Ganja Smuggling Case: கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ganja Smuggling Case
Ganja Smuggling Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 9:20 PM IST

சென்னை: 2020 பிப்ரவரி 11ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரை அருகே கஞ்சா கடத்துவதாக, காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, பெரிய காஞ்சிபுரம் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

மேலும், அவர் வைத்திருந்த அரிசி மூட்டையைப் பிரித்துப் பார்த்தனர். அப்போது, அதில் இரண்டு கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்த விசாரணையில் பிடிபட்ட பெண் பெரிய காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த பவானி என்பது தெரியவந்தது.

இதன் பிறகு, அவரிடம் இருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுக்கு ஆளானவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளன. ஆகவே, குற்றம்சாட்டப்பட்ட பெண் பவானிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாறிய புதுச்சேரி அரசுப் பள்ளிகள்.. பெற்றோர்கள் உற்சாகம்!

ABOUT THE AUTHOR

...view details