தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு.. வேன் உரிமையாளர் கொடூர கொலை.. கோவில்பட்டி அருகே பரபரப்பு! - Kovilpatti Van owner murder - KOVILPATTI VAN OWNER MURDER

Van owner murder in dispute over money: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் தனியார் வேன் டிரைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர்
கொலை செய்யப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 4:50 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா என்பவரின் மகன் மாடசாமி (37). இவர் தனக்குச் சொந்தமான டூரிஸ்ட் வேன் மூலம் தனியார் மில்லுக்கு தொழிலாளர்களை பணிக்கு அழைத்துச் சென்று வரும் பணியை செய்து வந்தார்.

இவருக்கு மகாதேவி (30) என்ற மனைவியும், மகாஸ்ரீ (11), மதி (4) என இரு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது பணிகளை முடித்து விட்டு தினமும் இரவு 8 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். ஆனால், நேற்றிரவு வெகுநேரமாகியும் மாடசாமி வீட்டுக்கு வரவில்லை என்றும், அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில், மூப்பன்பட்டி சுடுகாட்டில் மாடசாமி கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை அவ்வழியாகச் சென்ற மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சுகாதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

பின்னர், கொலை செய்யப்பட்டு கிடந்த மாடசாமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையான மாடசாமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோபி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் வாக்குவாதம் ஏற்பட்டதும், ஒரு வாரத்துக்கு முன்பு கோபி வீட்டுக்குச் சென்று மாடசாமி தகராறில் ஈடுபட்டதும், அப்போது மாடசாமி கோபியை தாக்கியதும் தெரியவந்தது.

மேலும், இந்த மோதலை தொடர்ந்து ஆத்திரமடைந்த கோபி, நேற்றிரவு மாடசாமியை வழிமறித்து சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனிடையே, தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் கோபியை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ரவுடி முருகையன் கொலை வழக்கு; தஞ்சையில் சரணடைந்த சாமி ரவி!

ABOUT THE AUTHOR

...view details