மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சீர்காழியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினம்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு காலில் அடிபட்ட நிலையில் சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர் மருத்துவர்கள் இல்லாத நிலையில் காயத்துக்கு கட்டுப்போட செவிலியரும் அந்த நேரம் இல்லாததால் அங்கிருந்த டிஞ்சர் மருந்தை வைத்து அதன் பின்னர் தனக்குத்தானே காலில் கட்டுப்போட்டுக் கொண்ட நோயாளியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:மருத்துவருக்கு கத்திக்குத்து; 'திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா?' - தலைவர்கள் கண்டனம்