தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி ரத்து.. எப்போது அமல்? - RC Cancel rules - RC CANCEL RULES

RC Cancel: 18 வயது பூர்த்தியடையாதவர்கள் கார் அல்லது இருசக்கர வாகனங்களை இயக்கி பிடிபட்டால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஆர்.சி ரத்து செய்யப்படும் என்ற புதிய முறை ஜீன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

Traffic
சென்னை டிராபிக் (Credits - Chennai Traffic Police 'X' page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 7:37 PM IST

சென்னை: 18 வயது பூர்த்தியடையாதவர்கள் கார் அல்லது இருசக்கர வாகனங்களை இயக்கி பிடிபட்டால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (ஆர்.சி) ரத்து செய்யப்படும் என்ற புதிய முறை ஜீன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

சமீப காலமாக 18 வயதிற்கும் குறைவான சிறார்கள் வாகனங்களை இயக்கி, அதன் மூலம் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், சிறார்களின் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறைத் தண்டனை புதிய வாகனச் சட்டத்தின்படி விதிக்கப்படும். அதேபோல், வாகனம் ஓட்டிய சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details