புதுச்சேரி:புதுச்சேரியைச் சேர்ந்த 25 வயது பெண்ணின் புகைப்படத்தை, லோகாண்டோ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது சம்பந்தமாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.
இதன்படி, புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா ஆண்கள் சிலர், லோகாண்டோ வெப்சைட்டில் பாண்டிச்சேரி என்று தேடி, அதில் உள்ள புகைப்படத்தைத் தேர்வு செய்து தொடர்பு கொண்டு, பணத்தைக் கட்டி ஏமாந்து உள்ளனர் என தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக காரைக்குடியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை புதுச்சேரி சைபர் கிரைம் ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் காவலர்கள் மணிமொழி, அருண்குமார், அரவிந்தன் ஆகியோர் கைது செய்து, தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் முன் ஆஜர்படுத்தி, மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.