தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கையே கருகி போச்சு.. பெண் மருத்துவர் உயிரை பறித்த லேப்டாப் சார்ஜர்.. சென்னையில் சோகம்! - Chennai WOMAN DOCTOR DEATH - CHENNAI WOMAN DOCTOR DEATH

lady doctor died in chennai:சென்னைக்கு பயிற்சிக்கு வந்த கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த டாக்டர் சரணிதா
உயிரிழந்த டாக்டர் சரணிதா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 1:24 PM IST

சென்னை: நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூரை சேர்ந்தவர் சரணிதா (32). பயிற்சி மருத்துவரான இவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். சரணிதாவின் கணவர் உதயகுமாரும் கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக உள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த சரணிதா அயனாவரத்தில் உள்ள சாய் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை சரணிதாவுக்கு அவரது கணவர் உதயகுமார் தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால் சரணிதா போனை எடுக்கவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த உதயகுமார் மனைவியுடன் பணிபுரியும் கமலா என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். கமலா அறைக்குச் சென்று பார்த்தபோது மூச்சு பேச்சு இல்லாமல் சரணிதா இறந்து கிடந்துள்ளார்.

உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த அயனாவரம் போலீசார் சரணிதாவின் அறைக்குள் சென்றபோது, சரணிதா கையில் சார்ஜ் கேபிளை பிடித்தவாறே இறந்து கிடப்பது தெரிய வந்தது.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நெல்லை தீபக் ராஜா உடல் ஒப்படைப்பு; பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details