தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது! - GOODS TRAIN DERAILED

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது. ரயில்வே ஊழியர்கள் சரிசெய்த பிறகு சரக்கு ரயில் தண்டையார் பேட்டை யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

தடம் புரண்ட சரக்கு ரயில்
தடம் புரண்ட சரக்கு ரயில் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 10:52 PM IST

சென்னை : சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று( நவ 9) மாலை துறைமுகத்திலிருந்து கண்டெய்னர்களை இறக்கிவிட்டு தண்டையார்பேட்டை யார்டுக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது இந்த சரக்கு ரயிலின் நான்கு சக்கரங்கள் திடீரென தடம் புரண்டன. இதனால் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. இதனையறிந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தண்டவாளத்தை விட்டு இறங்கிய சக்கரங்களை சரி செய்தனர்.

இதையும் படிங்க :"234 சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர்" - திருமாவளவன் தேர்தல் வியூகம் என்ன?

சரி செய்யப்பட்ட காலி சரக்கு ரயில் தண்டையார்பேட்டை யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. சரக்கு ரயிலின் சக்கரங்கள் தடம் புரண்டது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details