மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சை அருள்மிகு பசுபதீஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது. தேவாரப் பாடல்கள் பாடப் பெற்ற சிவதலமாக விளங்கும் இந்த கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 1000 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலங்களின் தற்போதைய மதிப்பு சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். இந்த கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைக் குத்தகைக்குக் கொடுக்காமல், கோயிலின் டிரஸ்டிகளே தங்களுக்குள் பகிர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இதற்கு ஆண்டு ஒன்றுக்கு 575 ரூபாயும், நெல்லும் கொடுக்கின்றனர். இந்த நிலங்களை முறையாகக் குத்தகைக்கு வழங்கினால், பல லட்சங்களைக் குத்தகையாகவும் வசூலிக்கலாம். இதனால் கோயிலுக்கு வருமானம் அதிகரிக்கும். ஆனால், அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், இந்த கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், 162 வெவ்வேறு சர்வே எண்களில் உள்ளன. ஆனால், அவை முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அடையாளம் காண்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைப் பலர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலை தொடர்ந்தால், அந்த நிலங்கள் கண்டுபிடிக்கப்படாமலேயே போகும் நிலையும் உருவாகும். எனவே, இந்த கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அடையாளம் கண்டு, அவற்றை அளவீடு செய்து, மீட்டெடுத்து, முறையாகப் பராமரிக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.