சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 625 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடந்த மார்ச் 26 முதல் ஏப் 8ஆம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (மே 10) வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் தனியார் பள்ளியில் படித்த சுபாஷினி என்ற மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளியிலேயே அதிக மதிப்பெண் எடுத்தார். இவர் ஆங்கிலத்திலும், அறிவியல் பாடத்திலும் முழு மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். முன்னதாக, ஹாக்கி போட்டியில் சுபாஷினி மாவட்ட அளவில் முதல் இடமும், மாநில அளவில் நான்காம் இடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.