அரியலூர்:அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழே சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 8 மாணவர்கள் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு மாணவர் என 9 பேர் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ளனர்.
திரும்பி சென்னை நோக்கிச் செல்லும் போது அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது பச்சையப்பன் என்ற மாணவர் ஆற்றின் சூழலில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் அவரை காப்பாற்ற மற்ற இளைஞர்கள் முயன்றுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு இருந்த பொதுமக்கள் 6 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும், மீதமுள்ள 3 பேர் மாயமான நிலையில் இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.